×

சித்தேரி கரையை சமூக விரோதிகள் உடைப்பு: கலெக்டர் உத்தரவையடுத்து சீரமைத்ததால் தண்ணீர் வெளியேறுவது நிறுத்தம்

அரியலூர், ஏப்.30: சித்தேரி ஏரிக்கரையை சமூக விரோதிகள் உடைத்துள்ளனர். கலெக்டர் உத்தரவையடுத்து சீரமைத்ததால் தண்ணீர் வெளியேறுவது நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். அரியலூர் நகராட்சிக்குட்பட்ட ஏரிகளில் சித்தேரி மிகப்பெரிய ஏரி. நகரின் மிகப்பெரிய நீர்த்தேக்கமாக இந்த சித்தேரி விளங்குவதால், நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்பட்டு, பொதுமக்களின் வீடுகளில் உள்ள போர்வெல்களில் தண்ணீர் மட்டம் அதிகரித்து, குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டது. இந்த சித்தேரியில் தற்பொழுது வெயில் காலத்தில் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வந்தது. இந்நிலையில் நேற்று காலையில் ஏரிக்கரையின் ஒரு ஓரத்தில், சமூக விரோதிகள் சிலர் ஏரிக்கரையை உடைத்துள்ளனர். இதனால் ஏரியிலிருந்து தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இது தொடர்ந்தால் ஏரியில் உள்ள அனைத்து நீரும் வெளியேற்றப்பட்டு, சித்தேரி நீரின்றி வறண்டு போய்விடும். இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு, வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள போர்வெல்களில் தண்ணீர் கிடைக்காத சூழ்நிலை உருவாகும்.

எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் ஏரியிலிருந்து வெளியேறும் நீரை தடுத்து நிறுத்துவதோடு, ஏரிக்கரையை உடைத்த சமூக விரோதிகளை கண்டு பிடித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அரியலூர் நகர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மாவட்ட கலெக்டர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா, அரியலூர் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்புகொண்டு, உடனடியாக சித்தேரியில் இருந்து வெளியேறும் தண்ணீரை நிறுத்தி, வெட்டப்பட்ட கரையை அடைத்து, ஏரியை பலப்படுத்த உத்தரவிட்டார்.
அரியலூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பவ இடத்திற்கு பொக்லைன் இயந்திரத்தை கொண்டு சென்று, கரையின் உடைப்பை அடைத்து விட்டார். இதனால் ஏரியிலிருந்து தண்ணீர் வெளியேறுவது நிறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் உடனடி செயல், அரியலூர் நகர மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆற்று நீரால் மாவட்ட மக்களின் குடிநீர்
பஞ்சத்தை போக்க முடிவதில்லை. இதன் காரணமாகத்தான் திருச்சி மாவட்டம் கொள்ளிடம், ஆற்றில் இருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம், கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப் பட்டு, பெரம்பலூர் நகராட்சி, குரும்பலூர் பேரூராட்சி மற்றும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கிராமங்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

The post சித்தேரி கரையை சமூக விரோதிகள் உடைப்பு: கலெக்டர் உத்தரவையடுத்து சீரமைத்ததால் தண்ணீர் வெளியேறுவது நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Chitheri ,Ariyalur ,Ariyalur Municipality ,Sitheri ,Dinakaran ,
× RELATED ஆன்லைனில் இழந்த ₹1.51 லட்சம் மீட்டு...